” அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைப்பதைவிடவும், உள்ளேயே பேசி தீர்த்துக்கொண்டு – முன்னோக்கி பயணிப்போம்.” – இவ்வாறு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ‘மொட்டு’ அரசின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் பங்காளிக்கட்சி தலைவர்கள் உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதில் பங்கேற்றனர்.

இதன்போது உரப்பிரச்சினை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.