ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்துவருகின்றார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலை தேசிய பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ள வேண்டும் எனவும், மொட்டு, யானை மற்றும் அன்னம் ஆகிய சின்னங்கள் இல்லாமல் பொது சின்னத்தில் அவர் களமிறங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொது சின்னமாக இருந்தால் ஜனாதிபதியை ஆதரிக்க பல தரப்புகளும் முன்வந்துள்ளதால் தற்போது அந்த சின்னம் பற்றி ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
சின்னம் மற்றும் கூட்டணியின் பெயர் என்பன உள்ளிட்ட விவகாரங்களைக் கையாள்வதற்கான ஆலோசனைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
		
                                    









