ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெயரிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே கோட்டாபய ராஜபக்ச ஆதரவு வழங்குவார்கள் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணி ஊடாக வியத்கம உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் முயற்சியில் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச இருக்கின்றார் என தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,
“ கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், அவ்வாறு உறுப்புரிமை பெற்றதால்தான் அவரால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிந்தது. மொட்டு கட்சியின் வேட்பாளருக்கே அவர் ஆதரவு வழங்குவார் என்பது உறுதி. மாறாக ஏனைய அரசியல் சக்திகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கமாட்டார். அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்.” – என்றார்.










