ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தேசப்பரிய களமிறங்குவாரா?

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாதென தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கவே முடியாது. அதனை செய்வதாயின் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். அதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதி அவசியம். நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் தேவை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில் அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் மக்கள் வன்முறையற்ற அமைதி போராட்டத்தில் இறங்குவார்கள். நானும் முதலில் சட்டத்தை நாடுவேன். அதன்பின்னர் போராட்டம் செய்வேன். எனவே, அப்படியான முயற்சி இடம்பெறாது என்றே தோன்றுகின்றது.

அதேவேளை, நான் அரசியல் செய்வேன், ஆனால் தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன். ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அல்ல பிரதேச சபை தேர்தலில்கூட போட்டியிட மாட்டேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles