அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டால் அதற்கு முழு ஆதரவு வழங்குவேன் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி பெயரிடும் வேட்பாளருக்கு ஆதரவாக செயற்படுவேன். அது ராஜபக்சக்களில் ஒருவராக இருந்தால்கூட எனக்கு பரவாயில்லை, கட்சியின் முடிவுதான் முக்கியம்.
அறகலயவின் பின்னர் பூஜ்ஜியத்துக்கு வந்த மொட்டு கட்சியின் வாக்குவங்கி தற்போது 35 வீதம்வரை அதிகரித்துள்ளது.” – எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சி தீர்மானித்தால் அதற்கான பெரும்பான்மை ஜனாதிபதிக்கு காண்பிக்கப்படும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.
