ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில்! வெளியானது அதிரடி அறிவிப்பு!!

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அரசமைப்பில் ஏற்பாடு இல்லை. அதற்கான தேவைப்பாடும் அரசுக்கு இல்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா என என்னால் கூற முடியாது. அவ்வாறு நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு முடியும்.  அதற்கான சட்டப்பூர்வ அனுமதி அவருக்கு உள்ளது.   ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், குறைநிரப்பு பிரேரணை ஒன்றின் ஊடாக பொதுத்தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் நீதி அமைச்சர் என்ற வகையில் நானோ அல்லது அமைச்சரவையில் வேறு எவரோ யோசனை எதையும் முன்வைக்கவில்லை. அதற்கான உத்தேசமும் இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் அது ஜனநாயக ரீதியிலான பொறிமுறையும் அல்ல. சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல. 1982 இல் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பால் ஏற்பட்ட கறுப்பு புள்ளி இன்னும் மாறவில்லை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles