அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமான வேட்பாளர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” 2024 நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை அரசமைப்பின் பிரகாரம் இடம்பெறும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்துகின்றார். அவரே ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர். அடுத்த தேர்தலில் அவரே களமிறங்க வேண்டும். இது தொடர்பான நிலைப்பாட்டையே எமது கட்சி எடுக்கும்.” எனவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டார்.










