எதிர்வரும் ஜுலை முதல் வாரத்தில் கிடைக்கப்பெறும் கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுப்பார் – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜுலை முதல் வாரத்தில் கிடைக்கப்பெறும் கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி முடிவெடுப்பார். அதுவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதுபோல் அவர் காண்பித்துக்கொள்வார்.
அதாவது மேற்படி கருத்து கணிப்பில் மூன்றாம் இடம் என தெரியவந்தால் ஜனாதிபதி களமிறங்கமாட்டார். முதல் இரு இடங்கள் எனில் அவர் போட்டியிடுவார். அதனால்தான் தற்போது பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றது.” – என்றார்.