ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய கூடுகிறது இதொகாவின் தேசிய சபை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை அடுத்த வாரமளவில் கூடவுள்ளது என தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளுங்கட்சியின் இதொகா பங்காளிக்கட்சியாக அங்கம் வகித்தாலும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் அக்கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையிலேயே தேர்தல் தொடர்பில் முடிவெடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு தேசிய சபைக்கூடவுள்ளது.

Related Articles

Latest Articles