அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது – என்று அக்கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் இரவு மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தின்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
” ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளர், அது தொடர்பில் நாம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் அல்லது நிறுத்தாமலும் இருக்கலாம். ” – எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் .
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.










