ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி இறுதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றவுள்ளார். இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கான சமிக்ஞையையும் ரணில் வெளிப்படுத்தவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெப்ரவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி வெளிநாடு செல்லவுள்ளார். இந்த பயணத்துக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை வெளிநாட்டு பயணங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
பெப்ரவரி இறுதியில் ஆரம்பமாகும் ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் ஆட்டம், ஏப்ரல் மாதத்துக்கு பிறகு முழுவீச்சுடன் முன்னெடுக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.
