ஜனாதிபதி நாடு திரும்பினார்

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) நாட்டை வந்தடைந்தார்.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles