ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார். தற்போதைய நெருக்கடி நிலைமையை நாம் எதிர்கொள்வோம் – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன், வீதியில் இற்கும் ஒரு சிலருக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார்.