ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்த பெருமானின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள மிகப் புனிதமான நான்கு இடங்களில் ஒன்றாக புத்தகயா காணப்படுவதோடு 2002 ஆம் ஆண்டு புத்தகயா மகாவிகாரை உலக மரபுரிமையாக யுனொஸ்கோவினால் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. பெலவத்தே சீவலி தேரர் மற்றும் சாரநாத் மையத்தின் விகாராதிபதி வண. ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் இதன்போது ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.