” அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டால் அந்த முடிவை கௌரவமாக ஏற்பதற்கு நான் தயார்.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின் பதவியை எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஜனாதிபதி மாற்றலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. எனவே, அத்தகையதொரு முடிவை ஜனாதிபதி எடுத்தால் வெளியேறுவதற்கு நான் தயார்.
எமது பக்கத்தில் தவறில்லை என்பதாலேயே வெளியேறாமல் அரசுக்குள் இருக்கின்றோம்.” – என்றார்.
அதேவேளை, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல்வீரவன்ச ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.










