ஜனாதிபதி முறைமையை நீக்க மொட்டு கட்சி நிபந்தனை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமெனில் தற்போதைய தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவசியம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னோடிதான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி. அன்று முதல் இன்றுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் பிரதமர்தான் நாட்டின் தலைவர். எனவே, பிரதமரை பலப்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை அவசியம்.

தற்போதைய தேர்தல் முறைமையின்கீழ், பிரேமதாச ஜனாதிபதியின் ஆட்சியின்கீழ் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க சிறு கட்சிகளின் ஆதரவை பெற வேண்டி ஏற்பட்டது.

சந்திரிக்கா அம்மையாருக்கு ஆதரவு அலை இருந்தது எனக் கூறப்பட்ட தேர்தலில்கூட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க சிறு கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமானது.

மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிகாலத்தில் ஒரு தரப்பு அரசியல் இருந்து வெளியேறி, காலை வாரியது. ஆனால் எதிரணியில் ஒரு தரப்பை இணைத்துக்கொண்டே மஹிந்த செயற்பட்டார். நல்லாட்சியின்போதும் சிறு கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் ஆட்சி அமைக்கப்பட்டது.

எனவே, ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு, நாட்டின் பிரதானியாக பிரதமர் இருக்கும்போது ஆட்சியமைப்பதற்கு இவ்வாறு சிறு கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அக்கட்சிகளின் கோரிக்கைக்கமைய செயற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது நாட்டுக்கும், இந்நாட்டில் வாழும் பிரதான இனத்துக்கும் இழைக்கப்படும் அநீதியாக அமையும்.

எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமெனில் பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்ககூடிய சூழ்நிலை உருவாகக்கூடிய வகையில் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles