ஆர்மேனியா குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக மேலும் வலுவூட்ட அர்ப்பணிப்பதாக ஆர்மேனியா ஜனாதிபதி வகக்ன் கச்சதுரியன் (Vahagn Khachaturyan) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஆர்மேனியா ஜனாதிபதி , இலங்கையின் முன்னேற்றத்திற்காக விக்ரமசிங்கவின் அர்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.
நற்புறவான இலங்கை மக்களுக்கு நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு, வெற்றி மற்றும் சமாதானத்தை பிரார்த்திப்பதாகவும் ஆர்மேனியா ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.