ஜனாதிபதி வேட்பாளர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்கு மூன்று கோடி ரூபா இலஞ்சம் பெற்றனர் எனக் கூறப்படும் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் இராஜகிரியவில் இன்று நடத்திய சுற்றிவளைப்பின்போது அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமது கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கான சந்தர்ப்பத்தை வழங்குவற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் கோரியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கட்சி செயலாளரும் உள்ளடங்குகின்றார்.










