ஜனாதிபதி தேர்தல் உட்பட அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், பஸில் ராஜபக்சவின் பங்கேற்புடன் குறித்த அரசியல் பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மே தின கூட்டம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.