ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக பதவி விலகினார்.
இதையடுத்து ஆளும் மிதவாத கட்சியின் தலைவர் பதவிக்கு சுகாவுடன் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா மூவரும் போட்டியிட்டனர்.
அந்நாட்டு பாராளுமன்றம், மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534 பேர் புதிய ஆளும் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். இதில் 377 ஓட்டுகளை பெற்று யோஷிஹிடே சுகா பெரும் வெற்றி பெற்றார். சிகரு இஷிபா 68 வாக்குகளும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் 89 வாக்குகளையும் பெற்றனர்.