ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் எங்கும் புத்தாண்டின் முதல் நாளாம் இன்று மகிழ்ச்சியோடு மக்கள் கொண்டாடி வருகின்ற சூழலில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது ஜப்பானில் 30 இற்கு மேற்பட்ட நகரங்களில் ரிக்டர் அளவுகோலில் 6 க்கு மேல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடகொரியா தென் கொரியா மற்றும் ரஷ்யாவின் சைபீரியாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து வீதிகளில் ஜப்பான் மக்கள் தஞ்சமடைந்த இருக்கின்றனர். சாலைகள் விரிசல் விட்டு பிளந்து காணப்படுகிறது. ரயில் நிலையங்கள், வீடுகள், கடைகள் குலுங்கி சேதம் அடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல்நீரானது ஊருக்குள் வர தொடங்கியுள்ளதால் மாகாண வாரியாக சுனாமி எச்சரிக்கை அளவுகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு.
” சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும் என அஞ்சப்படுவதால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.” என தொலைக்காட்சியில் தோன்றி வலியுறுத்தியுள்ளார்.