ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 46 பேர் பலி!

ஜம்​மு-​ காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சிஐஎஸ்​எப் பாது​காப்பு படை வீரர்​கள் இரு​வர் உட்பட 46 பேர் உயி​ரிழந்​தனர்.

கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பின் காரண​மாக தீடீர் வெள்​ளப்​பெருக்​குடன் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது.

இதனால் சோசிட்டி மலை கிராமத்​தில் உயிரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 46-ஆக உள்​ளது. இன்​னும் பலர் இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருப்​ப​தாக நம்​பப்​படு​வ​தால் இறப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது. இது​வரை​யில் மீட்​கப்​பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது.

மீட்பு பணி​களில் என்​டிஆர்​எப், எஸ்​டிஆர்​எப், காவல்​துறை, ராணுவம், உள்ளுர் தன்​னார்​வலர்​கள் பெரிய அளவில் ஈடு​பட்​டுள்​ளனர். நிலைமை மோச​மாக இருப்​ப​தால் என்​டிஆர்​எப்​-ன் இரண்டு புதிய குழுக்​கள் உட்பட மீட்பு பணி​யாளர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

 

Related Articles

Latest Articles