ஜாதியை குறிப்பிட்டு த்ரிஷா மற்றும் கமல்ஹாசன் பற்றி மீரா மிதுன் சர்ச்சை பேச்சு!

மீரா மிதுன் தொடர்ந்து த்ரிஷா பற்றி சர்ச்சையாக பேசி வருகிறார்.

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் தொடர்ந்து பல பிரபலங்கள் பற்றி சர்ச்சையாக பேசி ட்வீட்டுகள் பதிவிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவை தாக்கி அவர் பதிவிட்டு இருந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. த்ரிஷா தன்னுடைய தோற்றத்தை காப்பி அடிக்கிறார் என்றும் தன்னைப் போலவே புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார் என்றும் மீரா மிதுன் கூறியிருந்தார். அந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் மீரா மிதுனை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

“த்ரிஷா இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கப் போகிறது. அடுத்த முறை நீங்கள் உங்களுடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து என்னை போலவே இருப்பதற்காக முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்” என மீரா மிதுன் பதிவிட்டு இருந்தார்.

மீரா மிதுன் தன்னை த்ரிஷாவுடன் ஒப்பிட்டதற்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்த நிலையில் தற்போது த்ரிஷாவின் ஜாதியை குறிப்பிட்டு ட்விட்டரில் சர்ச்சையாக பேசி இருக்கிறார் மீரா மிதுன். இது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கும் மீரா மிதுன், “ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது த்ரிஷா peta அமைப்பின் மெம்பர் என்ற காரணத்தினால் அவரை தூற்றினீர்கள். இன்று நான் அவரை பற்றி ஒரு உண்மை சொல்லி குற்றம்சாட்டும் போது நான் உங்களுக்கு கெட்டவளாக தெரிகிறேன். த்ரிஷாவை நல்லவராக காட்டுறீங்க. அந்த சமயத்தில் அவர் மன்னிப்பு கூட கேட்கவில்லை, அவரது அம்மா தான் கேட்டார். நேப்போட்டிசம் என்பது காஸ்டிஸம் என்கிற விஷயத்தில் இருந்து தான் வருகிறது. நான் ஓப்பனாக சொல்கிறேன் த்ரிஷா இந்தஇண்டஸ்ட்ரி உள்ளே வந்தது, இன்னும் இருப்பது, இன்னும் ஏதேதோ படங்கள் நடித்து கொண்டிருப்பது அவரது ஜாதி தான்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

 

 

மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் சில சீன்களில் நடித்து இருக்கிறேன் என புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் மீரா மிதுன். அந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டதற்கு த்ரிஷா தான் காரணம் என மீரா மிதுன் மற்றொரு ட்விட்டில் கூறி இருக்கிறார்.

அது மட்டுமின்றி பேட்ட படத்தில் இருந்தும் தான் நீக்கப்பட்டதற்கு த்ரிஷா தான் காரணம் என சொல்கிறார் மீரா மிதுன்.

பேட்ட படத்தில் பூங்கோடி என்கிற கதாபாத்திரத்தில் நான் தான் ஒப்பந்தம் ஆகி இருந்தேன் என கூறும் மீரா மிதுன், அதற்கு பிறகு த்ரிஷா தான் மாஃபியா கேங்கிடம் சொல்லி நீக்கிவிட்டதாக கூறுகிறார் மீரா மிதுன்.

 

மேலும் கமல்ஹாசனையும் விட்டு வைக்கவில்லை மீரா மிதுன். த்ரிஷா தன்னுடைய ஜாதி என்பதால் தான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது த்ரிஷாவுக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய போது அவருக்கு ஆதரவாக பேசினார். நான் அவர் ஜாதி இல்லை என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என் பெண்மைக்கு பிரச்சனை வந்த போது குரல் கொடுக்கவில்லை என கூறுகிறார்.

 

 

மீரா மதுனின் இந்த பதிவுகளைப் பார்த்து வழக்கம்போல நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து தான் வருகின்றனர்.

 

  • நன்றி சமயம்.கொம்

Related Articles

Latest Articles