நுவரெலியா மாவட்டத்தில் களனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்குட்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் களனிவெளி கம்பனியின் அடாவடிதனத்தை கண்டித்தும், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் போடைஸ், பட்டல்கல, சாஞ்சிமலை, இன்வெரி, இஞ்ஸ்ட்ரி, ரொப்கில், சாஞ்சமலை, பிலிபோனி
அதேபோல் நுவரெலியா பீட்று தோட்டத்திற்கு கீழ் இயங்கும் பீட்று,லவர்சிலீப்,மூன்பிளேன், மாகாஸ்தோட்ட,ஸ்கிராப் ஆகிய தோட்டங்களுடன் ஒலிபண்ட் மற்றும் நுவரெலியா டிவிஷன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
உடரதல்ல மேல் மற்றும் கீழ் பிரிவு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பணி பறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.