ஜீவன் தொண்டமானுக்கு இருக்கும் திறானி, திகாம்பரத்துக்கு கிடையாது!

” ஜீவன் தொண்டமானுக்கு இருக்கும் திறானி, திகாம்பரத்துக்கு கிடையாது.” என்று இ.தொ.காவின் பிரதி தேசிய அமைப்பாளர்(அரசியல் பிரிவு) ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் சோ.மோ சிறிதரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” கடந்த அரசில் கெபினட் அமைச்சராக இருந்து 50 ரூபாயை கூட வாங்கி தர முடியாத திகாம்பரம் கட்சியில் உள்ளவர்கள், ஜீவன் தொண்டமானை விமர்சனம் செய்ய தகுதியற்றவர்கள்.
அரசில் இருந்து மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாததால் தான் ஜீவன் தொண்டமான் இராஜனாமா செய்தார்.

கடந்த அரசாங்கத்தில் உங்கள் தலைவர் திகாம்பரம் கெபினட் அமைச்சராக இருந்து ஐந்து வருட காலமாக ஐம்பது தடவை இராஜினாமா செய்வதாக கூறி, அரசின் வரப்பிரசாதத்திற்காக ஒரு தடவையேனும் இராஜினாமா செய்யவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இப்பொது தெரிகிறதா யாருக்கு திறானி இருக்கிறது?யாருக்கு திறானி இல்லை ?

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் உங்கள் கட்சி தலைவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இன்று நாட்டில் மின்சாரம் இல்லாதது போல், உங்களுடைய கட்சி தலைவர் கட்டிய இந்திய வீட்டுத்திட்டத்தில் மின்சாரமும் கிடையாது. இன்று நாட்டில் குடிநீர் இல்லாதது போல் உங்களுடைய கட்சி தலைவர் கட்டிய இந்திய வீட்டுத்திட்டத்திலும் குடிநீர் கிடையாது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களும் ,உங்கள் தலைவர் திகாம்பரமும் ஒரே கொள்கை கொண்டவர்கள். இதுவே கொள்கை ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

உங்களுடைய ஒவ்வொரு அறிக்கைக்கும் பதில் அறிக்கை விட நாங்கள் தயாராகவுள்ளோம்.

ஆனால் இது குறைக்கூறும் தருணம் அல்ல, மக்களின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க வேண்டிய தருணம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். ” – என்றார்.

Related Articles

Latest Articles