ஜெனிவாவில் இலங்கைக்கு கைகொடுக்குமா இந்தியா?

ஜெனிவாத் தொடரில் எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டாலும் தமது நாட்டின் அரசமைப்புக்கு கட்டுப்பட்டே இலங்கை செயற்படும் எனவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது எனவும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாட்டின்போது ஜெனிவாத் தொடர் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியன தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் கூறியவை வருமாறு,

“இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நீண்டகால உறவு இருக்கின்றது. பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியில் அந்நாடு எமக்கு முக்கியத்துவம்மிக்க நாடாகும். எனவே, இலங்கைக்கு தீங்கு விளைவிக்ககூடிய நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் ஈடுபடாது என நாம் உறுதியாக நம்புகின்றோம். அந்தவகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது.

கிழக்கு முனையம் விவகாரத்தையும், ஜெனிவாவில் இந்தியா எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலைப்பாட்டையும் தொடர்புபடுத்துவது பொருத்தமான செயலாக அமையாது. கிழக்கு முனையம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் தற்போது மேற்கு முனையம் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது.

அதேவேளை,  இலங்கையால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள்  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் எமது நாட்டு அரசமைப்பின் பிரகாரமே முன்னெடுக்கப்படும். கடந்த ஆட்சியின்போது சிற்சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை எமது நாட்டு அரசமைப்புக்கு முரணானவை, எனவே, உள்ளக நெறிமுறையைமீறி செயற்படமுடியாது.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் தமக்கான அதிகார எல்லையை அறிந்து செயற்படவேண்டும். நாடுகளின் உள்விவகாரங்களில் கையடிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – என்றார்.

Related Articles

Latest Articles