ஜெனிவா சென்ற ரஞ்சன்!

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜெனிவாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் பங்கேற்றனர்.

” ரஞ்சன் ராமநாயக்க கொலை செய்யவில்லை. கொள்ளையில் ஈடுபடவில்லை. தவறுதலாக நீதிமன்றத்தை விமர்சித்ததால் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. எனவே, அவரை விடுவிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கான பொதுமன்னிப்பை வழங்க வேண்டும்.”- என போராட்டத்தில் பங்கேற்ற இலங்கையர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles