ஜெல் வடிவ தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று கைதாகியுள்ளனர்.

விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வரியில்லா வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நகைகள் ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பார்சல்களில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் தங்க கையிருப்பை, பயணிகள் பரிமாற்று பகுதியில் வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த முகாமையாளர் அதனை நாட்டுக்குள் கடத்திச் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மற்றைய இரு சந்தேக நபர்களும் இந்திய பிரஜைகள் என்பதுடன் அவர்கள் கொண்டு வந்த 7 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் துபாய் அல்லது சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தங்கம் கையிருப்பு ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது.

Related Articles

Latest Articles