ஜே.வி.பி. தலைவருடன் நியூசிலாந்து தூதுவர் பேச்சு!

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவருக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜே.வி.பி. தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்க, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கட்சியின் சார்பில் சந்திப்பில் பங்கேற்றனர்.

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மிக்கேல் ஏபில்டன், பிரதித் தூதுவர் ஏன்ட்ரூ ட்ரவலர், நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயக் கொள்கை ஆலோசகர் சுமுது ஜயசிங்க ஆகியோர் தூதரக சார்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்தும் ஜேவிபி இன் கொள்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இரு தரப்புப் பரஸ்பரப் புரிந்துணர்வை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles