ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

பொருத்தப்பட்ட அதிசொகுசு காரை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று(23) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

இதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.

சதொச ஊழியர் குழுவை கடமையிலிருந்து நீக்கி, வேறு பணிகளில் ஈடுபடுத்திய வழக்கில் மன்றில் ஆஜராகாததால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles