ஜோ பைடனுக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி!

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக்கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜனநாயகக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவர்களான முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் பிற உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் வரிசையில் கலிஃபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினர் ஆடம்ஷிஃப்பும் தற்போது இணைந்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து பிரச்சாரம் செய்து ஜோ பைடனால் வெற்றி பெறமுடியாது என்று ஜனநாயகக்கட்சி யினர் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, பல முக்கிய ஜனநாய கக் கட்சி எம்.பி.க்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் செனட் சபைத் தலைவர் சக் ஷும் கும் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று கடந்த வார இறுதியில் கூறியிருந்தார்.இந்தச் சூழலில், கலிஃபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினர் ஆடம்ஷிஃபும் இதே கருத்தை தற்போது முன்வைத்துள்ளார்.

தேர்தல் பரப்புரையின்போது டொனால்ட் டிரம்ப்பை நோக்கி தாமஸ் க்ரூக் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். எனினும் அந்தப் படுகொலை முயற்சியில் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சூட்டுச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு டிரம்ப்புக்கு வாக்காளர்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான முதல் தேரடி விவாதத்தின்போது அதிபர் பைடன் மிகவும் மோசமாக தடுமாறியதிலிருந்து அவர் அதியுயர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்றும் டிரம்ப்புக்கு எதிராக ஒரு பலவீனமான வேட்பாளரை ஜனநாயக் கட்சி நிறுத்தக் கூடாது என்றும் ஜன நாயகக் கட்சிக்குள் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலையில் எதிர்ப்பலைகள் இன்னும் வலுவடையலாம் என்று நம்பப்படுகிறது.

Related Articles

Latest Articles