‘ ஒத்த ஆளாக நாடாளுமன்றம் செல்லும் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் ஆவார். ஆட்சியையும் கைப்பற்றுவார்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன, 2020 ஆம் ஆண்டிலிருந்தே குறிப்பிட்டுவந்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டதை நியாயப்படுத்தியும் வந்தார்.
காலியில் சில நாட்களுக்கு முன்னர் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றிருந்தது. இக்கூட்டத்துக்கு வஜீரவின் ஆதரவாளர்கள் சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
“ சேர், ஞான அக்காவை விடவும் நீங்கள்தான் இப்போது ஹிட். எதிர்காலம் பற்றி கணிப்பதில் ஞான அக்காவே வித்துவான் என கூறினார்கள். ஜனாதிபதிகூட அவரிடம் சென்று, ஜோதிடம் பார்த்துள்ளார். ஆனால், நீங்கள் எப்படி, ரணில் பிரதமர் அவார் என்பதை அன்றே கணித்தீர்கள்.” என ஆதரவாளர்கள் வினவியுள்ளனர்.
“ நான் ஜோதிடக்காரன் அல்லன். அரசியல் அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். என்னால் தெரிவிக்கப்படும் கருத்துகள் பிழைத்தில்லை.” என பதிலளித்து மகிழ்ந்தாராம் வஜீர.










