டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி இன்றும் போராட்டங்கள் முன்னெடுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக்கூடாதென வலியுறுத்தி இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில்  ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட ஹேவாஹெட்ட , ஹோப் தோட்டத்து மக்கள் இன்று காலை அணிதிரண்டு, நீதி கோரி போராட்டத்தில் இறங்கினர். அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் ஒரு கட்சியின் தலைவரும்கூட. அப்படி பொறுப்பு வாய்ந்த ஒருவர் எவ்வாறு சிறுமியை வேலைக்கு அமர்த்த முடியும்,

இந்த சம்பவத்தின் பின்புலம் கண்டறியப்பட வேண்டும். உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இப்படியான சம்பவம் மீள இடம்பெறாததை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களும் அவசியம் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Related Articles

Latest Articles