டயகம மற்றும் தலவாக்கலை பகுதிகளில் இன்று (31) இடம்பெற்ற இருவேறு குளவி கொட்டுச் சம்பவங்களில் ஆறு தொழிலாளர்களும் ஒரு மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம முதலாம் பிரிவில் ஐந்து பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆறு பேரும் சிகிச்சைக்காக டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தலவாக்கலைப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மேலதிக வகுப்புக்காகச் சென்ற மாணவி ஒருவரும் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கௌசல்யா










