இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சபாநாயகரால் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச , அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க , நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா, நாடாளுமன்றத்துக்குள் வைத்து தன்னை தாக்கினார், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டயானா கமகே கோரிக்கை விடுத்தார்.
இந்த குற்றச்சாட்டை சுஜீத் பெரோ மறுத்துள்ளார். அவரும் விசாரணை கோரியுள்ளார். இந்நிலையிலேயே விசாணை குழு அமைக்கப்பட்டுள்ளது .










