‘டலஸ் அணி அரசியல் அநாதையாகும்’ – சாபமிடுகிறது மொட்டு கட்சி!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ‘சூழ்ச்சி’ மூலம் ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது. அத்தகைய முயற்சியை மேற்கொள்பவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” எமது கட்சிக்குள் சூழ்ச்சிக் குழுவொன்று இருந்தது. அந்த குழு யாரென்பது புரிந்துவிட்டது. அந்த குழுவினர் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்களால் வெற்றி பெறமுடியாது. எமது கட்சியை ஒழிக்கவும் முடியாது. டலஸ் தலைமையிலான உறுப்பினர்கள் நிச்சயம் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்படுவார்கள். மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – எனவும் சாகர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles