” நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிப்போம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு,
” டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரலாம் என நம்புகின்றேன். இது எனது கருத்தேதவிர கட்சியின் கருத்து அல்ல. 2005 இல் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற டலஸ் அழகப்பெரும பெரும்பாடுபட்டார். எம்மைபோல இடதுசாரி பொருளாதார சிந்தனை கொண்டவர்.” – என்றார் நாமல்.










