ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
மொட்டு கட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், மாற்று ஏற்பாடாகவும், அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலுமே இக்கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.
புதிய கூட்டணியில் இணைவதற்கு முக்கிய பல பிரமுகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கூட்டணியின் சின்னம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, அதன் நிறம் மஞ்சள் நிறமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் கட்டமைப்பில் உருவான மிகப்பெரிய கூட்டணியாக இது அமையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிலான் பெரேரா, நாலக கொடஹோவா உட்பட மொட்டு கட்சி எம்.பிக்கள் 20 பேர்வரை டளஸ் பக்கம் நிற்கின்றனர், சுயாதீன அணிகளும் இந்த கூட்டணியை வரவேற்றுள்ளன.










