டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது.

அடிக்கடி ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பது அவரது உடல்நலத்தை பாதித்து வருவதாகவும், ஆகவே அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டாடா குழும தலைவராக ரத்தன் டாடா 1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் தலைவராக இருந்தபோது டாடா குழுமம் வேகமாக வளர்ந்தது. பல்வேறு நிறுவனங்களையும் விலைக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles