” டான் பிரியசாத் பாதாள குழு உறுப்பினர் அல்லர். எனவே, அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் பாதாள குழுவுக்கு தொடர்பு இருக்கும் என நம்பவில்லை.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” டான் பிரியசாத் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் அல்லர். சிங்கள, பௌத்த மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த துணிச்சல்மிக்க இளைஞன். மாற்று அரசியல் கருத்தை கொண்டிருந்தவர்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மக்கள் சுதந்திரமாக கொலை செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.