வாளுடன் ‘டிக் டொக்’ வளைத்தலத்தில் காணொளியொன்றை பதிவு செய்து வெளியிட்ட 18 வயது இளைஞரொருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கானையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
