டிஜிட்டல் தராசு வேண்டாம் -பண்டாரயெலிய பெருந்தோட்டத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஹப்புத்தளைப் பகுதியின் பண்டாரயெலிய பெருந்தோட்டத்தின் தொழிலாளர்கள் ஐநூறு பேர் இன்று( 09-03-2022) பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்கொண்டனர்.

கொய்யப்படும் தேயிலைத் தளிர்களை நிறுப்பதற்கு தோட்ட நிருவாகம் நவீன முறையிலான டிஜிட்டல் தராசு பாவனையை மேற்கொண்டமையைக் கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டங்களும் பணிப் பகிஸ்கரிப்பும் இடம்பெற்றன.

நவீன முறையிலான டிஜிட்டல் தராசு எமக்கு வேண்டாம் இத்தராசினால் நான்கு கிலோ எடையை குறைத்து காட்சிப்படுத்துகின்றது. தொழிலாளர்களின் அடையாள அட்டைப் பதிவும் இத்தராசில் பதியப்படுகின்றது. ஆகையினால் இத் தராசுப் பாவனையை உடன் நிறுத்தும்படி தொழிலாளர்கள் கோரிக்கைகளை விடுக்கின்றனர்.

இத் தராசு நிருவாகத்திற்கு சாதகமாகவும்  தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டுவதற்கும் பயன்படுத்தப்படுவதாக தொழிலாளிகள்
புகார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles