டீசல் தட்டுப்பாடு: கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பணிப்புரை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கு ஏஏஎஸ்எல் நிறுவனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ராஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப் படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

AASL நிறுவனத்தினால் டீசலுக்கு முன்பதிவு வழங்கப்பட்ட போதிலும், இன்னும் பெறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விமான நிலைய ரேடார் அமைப்புகளை இயக்குவது உட்பட AASL இன் அத்தியாவசிய சேவைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், இலங்கை விமானங்களுக்கு வழங்கு வதற்கு போதுமான விமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles