இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், தில்லியில் உள்ள தெருமுனையில் ஞாயிற்றுக்கிழமை தேநீர் அருந்தி மகிழ்ந்தார். இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம், சாணக்யபுரியில் உள்ள தங்களுக்குப் பிடித்த டீக்கடைக்கு திரு ஸ்கோல்ஸை அழைத்துச் சென்றதாகவும், மேலும் அவர் ‘ருசியான கப் சாயை’ ருசித்த படங்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறியது.
“ருசியான சாய் இல்லாமல் இந்தியாவை எப்படி அனுபவிக்க முடியும்? சாணக்யபுரியில் ஒரு தெருமுனையில் உள்ள எங்களுக்குப் பிடித்த டீக்கடைக்கு Bundeskanzler Olaf Scholz-ஐ அழைத்துச் சென்றோம். நீங்கள் அனைவரும் செல்ல வேண்டும்! இந்தியாவின் உண்மையான சுவை” என்று தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
இந்த பதிவுக்கு ட்விட்டர் பயனர்கள் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நாங்கள் நல்ல மனிதர்கள் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவரது இந்திய வருகையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவரது வருகை எங்கள் பிணைப்புகளை ஆழமாக வலுப்படுத்தும் என்று நம்புகிறேன் என்றவாறான பதிவுகளை காண முடிந்தது.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கும் சென்ற அதிபர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆண்கள் மற்றும் பெண் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
திரு ஸ்கோல்ஸ் பிப்ரவரி 25 அன்று இந்தியா சென்றார். அவர் அதிபராக பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் இந்தியாவுக்கான அவரது முதல் பயணமாக இது அமைந்துள்ளது. பிரதமர் மோடிக்கு ராஷ்டிரபதி பவனில் அதிபர் ஷோல்ஸ் வரவேற்பு அளித்தார், அங்கு ஜெர்மன் தலைவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மன் அதிபருக்கு ‘மேகாலயா ஸ்டோல்’ மற்றும் ‘நாகலாந்து சால்வை’ ஒன்றையும் மோடி பரிசாக வழங்கினார்.
சுத்தமான எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி இந்தியப் பிரதமரும் ஜெர்மன் அதிபரும் பரந்த அளவிலான பேச்சுக்களை நடத்தினர்.