டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பெதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்களைப் பெற்றார்.

143 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா அணி, 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.

முதல் 6 ஆட்டங்களில் 5 தோல்வியை தழுவி இருந்தது கொல்கத்தா அணி. மழை காரணமாக ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், அந்த அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles