10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 2-வது ஆட்டத்தில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோல்வி கண்டது.
அடுத்து, தன்னுடைய 2-வது உள்ளுர் மைதானமான விசாகப்பட்டினத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
அதேபோல் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சையும், அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும் பதம்பார்த்து வலுவான நிலையில் உள்ளது.
விசாகப்பட்டினத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்தை தொடர்வதற்காக டெல்லி அணியும், ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைப்பதற்காக கொல்கத்தா அணியும் தீவிர முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “,