இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
நேற்றைய(30) தினத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 288.06 முதல் ரூ. 286.12 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 303.55 முதல் ரூ. 301.50 ஆகவும் குறைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 288.78 முதல் ரூ. 285.81 மற்றும் ரூ. 301 முதல் ரூ. 298 ஆக காணப்படுகிறது.
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 291 முதல் ரூ. 289 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 303 முதல் ரூ. 301 ஆகவும் குறைந்துள்ளது.










