ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை இரத்து செய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக் க பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவின் ‘அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்’ அல்ல என்பதால், குடியுரிமை சட்டத்தின் 14-வது திருத்தத்தில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்கு பொருந்தாது” என்று பிறப்பித்த உத்தரவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது
. அப்போது நீதிபதி ஜான் கோக்னார், “ட்ரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.” எனக் கூறி அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்துள்ளார்.

இதன் மூலம் ட்ரம்ப் உத்தரவு அமுலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles