ட்ரம்ப், புடின் 3 மணிநேரம் பேச்சு: போர் நிறுத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை!

 

உக்ரைன் விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருக்கிடையில் அலாஸ்காவில் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும், நல்ல தொடக்கமாக அமைந்தது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.

உக்ரைனுக்கு எதிராக, 2022ம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் உக்ரைன் – -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டி வரும் டிரம்ப் , ரஷ்ய ஜனாதபதி புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் உடன், ரஷ்ய ஜனரிபதி நடத்திய சந்திப்புக்கு பின், அமெரிக்க ஜனரிபதி டிரம்பை சந்திக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக் கொண்டார்.

அதன்படி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் டிரம்ப் – புடின் சந்தித்து பேச்சு நடத்தினர்.
விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு டிரம்ப் வருகை தந்தார்.

தொடர்ந்து அதே பகுதிக்கு புடினும் தனி விமானத்தில் வந்திறங்கினார். முதலில் விளாடிமிர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். டிரம்ப் மற்றும் ர புடின் ஆகியோர் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை முடிந்ததை தொடர்ந்து அமெரிக்க டிரம்ப்- புடின் இருவரும் மீண்டும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

” எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் நேட்டோவையும், ஜெலன்ஸ்கியையும் அழைத்து பேசுவேன். அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடைபெறும்.” – என்று குறிப்பிட்டார்.

” புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ரஷ்யா- உக்ரைன் போர் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. முடிவு எட்டப்பாவிட்டாலும் பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது.” – என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles