தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரியளவில் உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தளபதி விஜய்யின் பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வந்தனர்.
இதனிடையே ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் ஹாஷ்டேக்கள் பட்டியலில் தளபதி விஜய்யின் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் 2021-ஆம் ஆண்டின் அதிக பயன்படுத்திய ஹாஷ்டேக்கள் பட்டியலில் மாஸ்டர் இடம் பிடித்துள்ளது. அதிக பயன்படுத்திய திரைப்படங்களின் ஹாஷ்டேக்குகளில் மாஸ்டர் மற்றும் பீஸ்ட் இடம் பிடித்துள்ளது.
மேலும் அதிகம் லைக் செய்யப்பட்ட பொழுதுபோக்கு பதிவில்பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் தான் இருக்கிறது. இதனிடையே இது குறித்து ட்விட்டர் நிறுவனமே தளபதி விஜய் மற்றும் அவரின் ரசிகர்களை புகழ்ந்து தள்ளியுள்ளது.